இலக்கிய வினாடி வினா

Main Auditorium

ஏனைய இனமெல்லாம் எல்லாம் தத்தித் தடுமாறிப் பேசப் பழகிய காலத்திலேயே பண்கலைகளை சதங்கையாகக் கட்டி நடமாடியது தமிழினம். தமிழ் மொழி கடந்து வந்த பாதை தொன்மையானது மட்டுமல்ல இனிமையானதும் கூட. தமிழனின் வாழ்வியலோடு கலந்தது தமிழென்பதாலோ என்னவோ நமது இலக்கியங்களின் சமூகப் பார்வை மெச்சத்தக்கது. பல்லூடக வடிவில் நிகழ்த்தப்படும் இலக்கிய வினாடி வினா 2017, தமிழிலக்கிய அமுதை அள்ளிப் பருக அரும்வாய்ப்பு.

இலக்கணம், திருக்குறள், அறநெறி இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், நாட்டுநடப்பு, கவிதைகள், கட்டுரைகள் எனப் பல்வேறு பகுதிகளைப் படிக்க ஒரு வாய்ப்பு. அணிக்கு ஐம்பது பேருடன் “சங்கரதாஸ் சுவாமிகள் அணி” , “நா.வானமாமலையார் அணி” என இருபெரும் அணிகள் பங்கேற்கும் மாபெரும் நிகழ்வு.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம் – மகாகவி பாரதியார்.

தமிழ் இலக்கியம் அறிவோம்! தமிழ்ச் சுவையை உணர்வோம்!!
தமிழோடு உரையாடுவோம்! உறவாடுவோம்!! விளையாடுவோம்!!

 

இலக்கியம் இளையோர் போட்டிகள்