தமிழ்த் தேனீ – இறுதிச் சுற்று

Main Auditorium

 

மழலை பகரும் தமிழ் பேரமுதே!

நமது பிள்ளைகளைத் தமிழிலே சிந்திக்கச் செய்வதே,  தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முக்கியமானதாகும். இதன் முதற்கட்டம் அவர்களை  தமிழிலே சரளமாகப் பேச வைப்பது.

தமிழிலே பேசவும், மேடையில் முழங்கவும் தமிழ்த் தேனீ 2017 போட்டிகள் ஓர் அறிய வாய்ப்பாகும். தமிழ்த்தேனீ போட்டிகளுக்கு முதன்முறையாக 1000 வெள்ளிகள் பணப் பரிசு வழங்கப்பட உள்ளது.

7 முதல் 15 வயதுடைய குழந்தைகளை வட அமெரிக்கத் தமிழ்த் தேனீ – 2017 போட்டிகளுக்கு இன்றே பதிவு செய்யுங்கள்.

• பேச்சுப் போட்டி (Speech): கொடுக்கப்படும் தலைப்புகளில் ஒன்றில் பிள்ளைகள் பேச, சொல்லாடல், ஆங்கிலம் கலவாமல் பேசுதல், உச்சரிப்பில் தெளிவு,  தலைப்பை ஒட்டி பேசுதல் போன்றவற்றின் அடிப்படையில் வரிசை படுத்தப் படுவர்.
குழந்தைகள் அதிகப்படியாக பிரிவு 1ல் (K12 Grade 2 & 3) 2 நிமிடங்கள், பிரிவு 2ல் (K12 Grade 4 & 5) 3 நிமிடங்கள் மற்றும் பிரிவு 3ல் (K12 Grade 6 & above) 4 நிமிடங்களும் பேசலாம்.
பேச்சுப் போட்டிகள் அனைத்தும் இணை அமர்வகத்தில் நடைபெறும்.

• எழுதும் போட்டி (Spelling Bee):
7 முதல் 15 வயதுடைய  பிள்ளைகளிடம் தமிழில் சொற்களைச் சொல்லி அதை பிழை இல்லாமல் எழுதச் செய்வோம். இதில் பிழை இல்லாமல் எழுதும் குழந்தைகள் எத்தனை சுற்றுகள் கடக்கிறார்கள் என்ற அடிப்படையில் முதல் மூன்று பரிசுகள் தேர்வு செய்யப் படுவர். வல்லினம், மெல்லினம், இடையினம், ஒற்று எழுத்து எனப் பல நுணுக்கங்களைப் பிள்ளைகள் உணர அறிய நிகழ்வு. இந்த போட்டிகள் அனைத்தும் இணை அமர்வகத்தில் நடைபெறும்.

• வினாடிவினா (Jeopardy format): பிள்ளைகளைப் பல குழுக்களாகப் பிரித்து வினாடி வினா நடத்தப்படும். இந்த நிகழ்வில் முன்னமே அளிக்கப்படக் கட்டுரைகளின் அடிப்படையில் பல சுற்றுகளில் கேள்விகள் கேட்கப்படும். இதிலே தமிழரின் பண்பாடு, மொழி, சமுதாயம், தலைவர்கள் எனப் பல தலைப்புகள் இடம்பெறும். வினாடிவினா  பேரவையின் விழா மேடையில் நடத்தப்படும். வினாடி வினாவில் வெற்றிபெறும் அணிக்குத் தமிழ்த் தேனீ பட்டமும் பரிசும் அளிக்கப்படும்.

அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப் படும்.

இலக்கியம் இளையோர் குழந்தைகள் போட்டிகள்