குறள் தேனீ – இறுதிச் சுற்று

Main Auditorium

வட அமெரிக்க குறள் தேனீ -2017

வள்ளுவம் உணர்ந்து உயர்வதே நமது உன்னத நோக்கம். இதன் முதல் படியாக நமது இளம் சிறார்களை வள்ளுவம் பக்கம் திருப்புவது நமது தலையாய கடமை.

வள்ளுவம் படித்தால் பயன் உண்டு! பணமும் உண்டு !!

ஆம் குறள் தேனீ போட்டிகளுக்காக 1330 வெள்ளிகள் பரிசுப்பணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுப்பண விவரம் கீழே காண்க.

1. உயர் நிலை – முதல் பரிசு – $500 மற்றும் குறள் தேனீ  2017 பட்டம்
2. உயர் நிலை – இரண்டாம் பரிசு – $250
3. உயர் நிலை – மூன்றாம் பரிசு – $125
4. தொடக்க  நிலை – முதல் பரிசு – $250
5. தொடக்க  நிலை – இரண்டாம் பரிசு – $125
6. தொடக்க  நிலை – மூன்றாம் பரிசு – $80

அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

தொடக்க  நிலை (5 முதல் 11 வயது )  35 திருக்குறள்

கொடுக்கப்படும் சொல்லை  கொண்டு தொடங்கும் குறளை  சொல்லுதல், குறளுக்கு பொருளை கூறுதல்  மற்றும் குறள் சொல்லி பொருளையும் சொல்லுதல் என மூன்று விதமான கேள்விகள் கேட்கப்படும். தொடக்க  நிலைக்கான  திருக்குறள் பட்டியல் காண இங்கே சொடுக்கவும்

உயர் நிலை (5 முதல் 18 வயது ) 100 திருக்குறள்

கொடுக்கப்படும் குறளின் அதிகாரத்தை சொல்லுதல், பொருளுக்கு பொருத்தமான குறளையும்   அதன் அதிகாரத்தையும் சொல்லுதல் மற்றும் குறள் சார்ந்த கேள்விகளுக்கு விடை அளித்தல் என பல விதமான கேள்விகள் கேட்கப்படும். உயர் நிலையில் பிள்ளைகளின் நினைவாற்றல் மட்டுமின்றி, அவர்களின் திருக்குறள் பற்றிய ஆழமான புரிதலை ஆராய்வதாக அமையும். உயர் நிலைக்கான  திருக்குறள் பட்டியல் காண இங்கே சொடுக்கவும்

தொடக்கநிலை போட்டியும் உயர்நிலைக்கான தகுதி சுற்றும் இணை அமர்வகத்தில் நடைபெறும். உயர் நிலைக்கான இறுதிச் சுற்று பேரவையின் விழா மேடையில் நடத்தப்படும்.

குறளுக்கான பலவிதமான உரைகள் www.thirukkural.com எனும் இணையதளத்தில் வழங்கப் பட்டுள்ளன.

2015 பேரவையின் குறள் தேனீ இறுதிச் சுற்றுக்கான யூடூப் பதிவைக் கீழே காணலாம்.

Please accept YouTube cookies to play this video. By accepting you will be accessing content from YouTube, a service provided by an external third party.

YouTube privacy policy

If you accept this notice, your choice will be saved and the page will refresh.

 

திருக்குறள் கற்போம், குறள் வழி நிற்போம்!

இலக்கியம் இளையோர் குழந்தைகள் போட்டிகள் விருதுகள்