FeTNA 2017 Program Entry Guidelines

பேரவை விழா-2017 நிகழ்ச்சி நுழைவு விதிமுறைகள்

FeTNA 2017 Program Entry Guidelines

 

பொது விதிமுறைகள் / General Guidelines

1. நிகழச்சிகள் தமிழில் தொகுத்து வழங்கப்படவேண்டும். Programs should be presented in Tamil Language. 

2. நிகழ்ச்சிகள் உள்ளூர்த் தமிழ்ச்சங்கத்தால் பரிந்துரைக்கப்படவேண்டும், நுழைவுகள் உங்கள் தமிழ்ச்சங்க அதிகாரிகளால் எங்களுக்கு அனுப்பப் படவேண்டும். Programs must be sponsored by your local Tamil Sangam and entries should be forwarded by the authorized officer of the respective Tamil Sangam.

3. ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சம் 20 நிமிடங்கள் வழங்கப்படும்.  இறுதி ஒப்புதல் முடிவு பல்வேறு காரணிகளின் அடிப்படையில் செய்யப்படும்  (உதாரணம்: ஒரே மாதிரியான நுழைவுகள், நிகழ்ச்சியின் தரம் ஆகியன). Each Tamil Sangam will be awarded up to a maximum of 20 minutes; however final acceptance is based on multiple factors (i.e., No of Similar entries, Quality of entry, etc)  

4. இவ்வாண்டுத் தமிழ் விழாவின் கருத்தைப் (தமிழர் கலையைப் போற்றிடுவோம்! தமிழர் மரபைமீட்டெடுப்போம்!!) பிரதிபலிக்கும் நிகழ்ச்சிக்களுக்கு முன்னுரிமை தரப்படும். Entries reflecting the theme of this year’s Vizha Title gets preference.

5. நிகழ்ச்சிகள் இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகளின் கிராமீய மற்றும் நவீன வடிவங்களாகவும் தனித்தன்மை வாய்ந்தவைகளாகவும் இருக்க வேண்டும். Unique entries in the following different segments (Modern or Classical, Music, Dance, or Drama) are encouraged.

6. குறைந்தது ஏழு நபர்கள் பங்கேற்கும் குழு நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கிறோம். We encourage group (minimum 7) performances.

7. இதற்கு முன்னர் உங்களது தமிழ் சங்க விழாக்களில் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சிகளை பரிந்துரைக்குமாறுகேட்டுக் கொள்கின்றோம்.  Preference will be given to programs successfully presented earlier in your Tamil Sangam.

8. ஒரு நபர் ஒன்றிற்கு மேற்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடாது.  An individual should not take part in more than one program. 

9. பங்கேற்பவர்களின் குறைந்தபட்ச வயது 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் விழாவிற்கு பதிவு செய்தவராக இருக்க வேண்டும். Participants’ minimum age limit is Seven years and registered for the vizha.

10.நிகழ்ச்சிகள், கண்டிப்பாக எவ்விதத்திலும் தவறான கருத்துக்களையோ, அவமதிப்பையோ, அல்லது அநாகரிகத்தையோ பிரதிபலிக்கக் கூடாது. Programs should strictly not reflect any form of misrepresentation, disrespect or indecency.

 

குறிப்பிட்ட விதிமுறைகள் / Specific Guidelines 

           நிகழ்ச்சியின் வடிவம்

அதிகபட்ச கால அளவு (நிமிடங்களில்)

பங்குபெறுவோர்களின்

குறைந்தபட்ச எண்ணிக்கை

நாடகம் அல்லது நாட்டிய நாடகம்

15

7

பாரம்பரிய நடனம் (கும்மி, பரதம், கோலாட்டம் போன்றவை)

5 ~ 7

7

தற்கால நடனம் (7-12 வயது வரம்பிற்கு உட்பட்டவர்கள்)

3 ~ 5

7

தற்கால நடனம் (13 அல்லது அதற்குமேல் உள்ளவர்கள்)

5

7               

குறிப்பு:  மேலே தரப்பட்டுள்ள நிகழ்ச்சி வடிவங்களில் இருந்து மாறுபட்ட  தமிழ்  சார்ந்த நல்ல படைப்புகளையும் வரவேற்கின்றோம்.

 

அனுப்புதல் / Sent to

*அனைத்து நுழைவுகளும் பேரவை வலைத்தளம் வாயிலாக எமக்கு வந்து சேர வேண்டும். பேரவை வலைத்தளத்தில் நுழைவு படிவத்தைப் பூர்த்தி செய்ய இங்கே சொடுக்குங்கள். All entries (Entry Form Attached) should be filled online at FeTNA web site, Click here to fill the online form.

*தயவு செய்து உங்கள் நிகழ்ச்சியின் யூ-ட்யூப் சுட்டியையும் சேர்த்து அனுப்ப வேண்டுகிறோம், அல்லது  உங்கள் நிகழ்ச்சியின் டிவிடி (திரும்பத் தரப்படாது) அனுப்ப விரும்பினால் எங்களை மின்னஞ்சலில் ( contact@fetnaconvention.org ) தொடர்புகொள்ளவும். Please send us a ‘You tube’ link of your performance which will help us in the review process. Please email us at contact@fetnaconvention.org if you would like to submit a non-returnable DVD.

 

காலக் கெடு / Timeline

*அனைத்து  நுழைவுகளும் ஏப்ரல் 15,2017 க்கு முன்னர் எமக்கு வந்து சேர வேண்டும். All entries should be received by or before April 15th, 2017.

*கெடு முடிந்தபின்னர் அனுப்பப்படும் நுழைவுகள் கருதப்படாது. Any entries received after the deadline will not be considered.

 

நுழைவு / Entry

*வந்து சேரும் நுழைவுகள் நிகழ்ச்சிகள் குழுவின் விதிமுறைகளுக்கும் தரத்திற்கும் உட்பட்டுள்ளனவா என ஆய்வு செய்யப்படும். நிகழ்ச்சிகளின் ஏற்பு, வரிசைமுறை மற்றும் நேர ஒதுக்கீடு குறித்த பேரவை நிகழ்ச்சிக் குழுவின் முடிவுகளே இறுதியானவை. All entries will be reviewed for guidelines and quality by Program Committee. Program Committee’s decision is final on acceptance, sequencing, and time slots of all programs.

தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் மே 15 க்குள் அறிவிக்கப்படும். Accepted entries will be announced on or before May 15th ,2017.