speaker-info

சந்தோஷ்

ஆராய்ச்சியாளர், நடிப்புக்கலைஞர், முனைவர்

ஆராய்ச்சியாளர், நடிப்புக்கலைஞர் முனைவர் எஸ்.சந்தோஷ்

முனைவர் எஸ்.சந்தோஷ் அவர்கள் பாண்டிச்சேரி பல்கலைக்கழக நிகழ்த்துகலை ஆய்வுத்துறையின் ஆராய்ச்சியாளர். நிகழ்த்துகலையில் முனைவர் பட்டமும், ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றவர். பன்னாட்டு நாடக விழாக்களில் பலமுறை நடிப்புக்கலைஞராகப் பங்களித்தவர். இந்திய தேசிய நாடகப்பள்ளியின் “Actors are Not Allowed”, பீத்தேவன், மந்திரன், கக்கன், அணையும் நெருப்பு முதலான நாடகங்களிலும் திரைப்படங்களிலும் தோன்றியவர். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாடக மேலாண்மைத்துறையிலும் பணிபுரிந்து வருபவர்.

தற்காப்புக்கலைகளான களரிப்பயாட்டு, சிலம்பாட்டம் முதலானவற்றிலும் உயர்பயிற்சி உடையவர். நுண்கலைகளைப் பயின்று, பயிர்றுநராகவும் இருந்து வருகிறார். நிகழ்த்துகலைகள், மரபுக்கலைகள், நுண்கலைகள், உளவியலாய்வு, நவீன தத்துவவியல், நாடகத் திறனாய்வு முதலான துறைகளில் நாட்டம் கொண்டு, ஆய்வுகள் மேற்கொண்டு, பல கட்டுரைகளை பன்னாட்டுக் கருத்தரங்குகளில் முன்வைத்து கருத்தாய்வு செய்பவர்.

தமிழுக்குக் கொடையாகப் பல்வேறு திறம்வாய்ந்த வல்லுநர்களை அளித்து வரும் பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஞானிகளின் மாணக்கராகத் தம்மைக் கருதும் சந்தோஷ் அவர்களின் அறிவுசால் பங்களிப்பும் கலந்துரையாடலும் அமெரிக்கத் தமிழ்ச்சமூகத்திற்கு பேருவகை கொள்ளக் கூடிய வகையில் அமையப் போகிறது. கலந்துரையாடி விழுமியமெய்த அனைவருக்கும் பேரவை அழைப்பு விடுக்கின்றது.

My Sessions

மருதநாயகம் – நாடகம்

Main Auditorium

மினசோட்டா மாகாணத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 30 ஆவது ஆண்டு தமிழ் விழாவில் ’மருதநாயகம்’மரபு நாடகம் அரங்கேற உள்ளது. நா. வானமாமலை (1917 – 1980) தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், தமிழறிஞர். தமிழரிடையே வழங்கி வந்த நாட்டார் பாடல்களை, கதைகளை, பழமொழிகளை, வழக்கங்களை சேகரித்துப் பதிப்பித்தார். ஐவர் ராசாக்கள் கதை, கட்டபொம்மு கூத்து, கட்ட பொம்மன் கதைப்பாடல் காத்தவராயன் கதைப்பாடல், கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் […]

நாடகம்
READ MORE