speaker-info

சமணராஜா

ஆய்வாளர், நடிப்புக் கலைஞர், பாடகர், இசைக்கலைஞர்

நிகழ்த்துகலைச்சிற்பி  முனவைர் சமணராஜா

நாடகத்துறையின் ஆய்வாளர்; செவ்விசை, நாட்டுப்புற இசை, மேற்கத்திய இசையில் பயிற்சியும் மேலான அனுபவமும் உடையவர். இசையமமைப்பாளராகவும் மிளிர்கிறார். நடிப்புத்துறையிலும் பல ஆண்டு கால அனுபவமுடையவர். தமிழ்நாட்டின் எல்லா இடங்களுக்கும் சென்று, இசை, நாடக, நாட்டி நிகழ்ச்சிகளைக் கற்று அரங்கேற்றி இருக்கிறார். வயலின், கின்னரப்பெட்டி முதலான இசைக்கருவிகளையும் நன்கு கையாளக்கூடியவர். பல இசை நாடகங்களுக்கு இவரே பாடலும் இசையும் அமைத்துக் கொண்டிருக்கிறார். நிகழ்த்துகலைகளில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளின் தொழில்நுட்பக் கூறுகள் எனும் தலைப்பில் ஆராய்ச்சியை மேற்கொண்டு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

இவரது பங்களிப்பில் நடத்தப்பட்ட ‘அணையா நெருப்பு’ எனும் நாடகம், இலக்கிய, நாடக, திரைத்துறையினரால் வெகுவாகப் புகழப்பட்டது. மருதநாயகம் மரபு நாடகத்தையும் நடத்த இவர் அமெரிக்க தமிழ்த்திருவிழாவுக்கு வருகை தரவுள்ளார். தமிழ்க்கலைகளையும் மரபையும் நேசிப்போர் கலந்து கொண்டு, துறை வல்லுநர்களுடன் பயனுற வேண்டியது எல்லாத்தமிழர்களுக்கும் கிடைத்திருக்கிற ஓர் அருமையான வாய்ப்பும் சூழலுமாகும்.

My Sessions

மருதநாயகம் – நாடகம்

Main Auditorium

மினசோட்டா மாகாணத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 30 ஆவது ஆண்டு தமிழ் விழாவில் ’மருதநாயகம்’மரபு நாடகம் அரங்கேற உள்ளது. நா. வானமாமலை (1917 – 1980) தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், தமிழறிஞர். தமிழரிடையே வழங்கி வந்த நாட்டார் பாடல்களை, கதைகளை, பழமொழிகளை, வழக்கங்களை சேகரித்துப் பதிப்பித்தார். ஐவர் ராசாக்கள் கதை, கட்டபொம்மு கூத்து, கட்ட பொம்மன் கதைப்பாடல் காத்தவராயன் கதைப்பாடல், கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் […]

நாடகம்
READ MORE