speaker-info

ரோகிணி

நடிகை, எழுத்தாளர், இயக்குனர்

திரைப்படக் கலைஞர் ரோகிணி

பாகுபலி, மகளிர்மட்டும், தங்கமீன்கள், மறுபடியும் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் தோன்றிய கலைஞர் திருமிகு ரோகிணி அவர்கள். நடிப்பு என்பதையுங்கடந்து இயக்குநர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பின்னணி குரலொலிப்பு என பன்முகத்திறம் கொண்டவர். இப்படிச் சொன்னால்தான் அவருக்கான அறிமுகம் சமூகத்தில் எளிதில் வசப்படுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து இவரொ ஓர் இலக்கியவாதியும் களப்பணியாளருமாவார்.

புத்தக வாசிப்பில் தமிழ்ச்சமூகம் முனைப்பாக தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், பல ஊர்களுக்கும் நேரடியாகச் சென்று வாசிப்பியக்கம் நடத்தி வருகிறார். சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, நாலாயிர திவ்யபிரபந்தம், பாஞ்சாலிசபதம், சா.கந்தசாமியின் ‘சாயாவனம்,’ நாவல், பெருமாள் முருகனின் ‘கூளமாதாரி’ நாவலென, சங்கத் தமிழ் நூல்கள் தொடங்கி நவீன இலக்கிய நூல்கள் வரையிலுமாக, சிறு வண்டுகள், பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், விலங்குகள், வனங்கள், ஆறுகள், நில அமைவுகள் என இயற்கையின் வளமும் வனப்பும் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளன என்பதை இலக்கிய மேடைகளில் எடுத்துரைத்து வருவதோடு நில்லாமல், சமூகச் சிக்கல்களுக்காக போராட்ட களத்திலும் பங்கு கொண்டு வருகிறார்.

விவசாயிகளின் இன்னல் தீரப் போராட்டம், மரபணு விதைகளுக்கெதிரான விழிப்புணர்வு, புற்றுநோய் விழிப்புணர்வு, பெண்கள் பாதுகாப்பினை வலியுறுத்திப் போராட்டமெனத் தொடர்ந்து சமூகத்தின் மேன்மைக்கான பொதுப்பணியில் ஈடுபட்டு வருபவர், தாம் இயக்கிய “அப்பாவின் மீசை” எனும் திரைப்படத்தையும் விரைவில் வெளியிடவிருக்கிறார். இவற்றுக்கிடையே அமெரிக்கத் தமிழர்களான நம்மைச் சந்திக்கவும் வருகிறார். கருத்துக்களம் நிகழ்ச்சியை வழங்குவதன் வாயிலாக நம்மிடையே அவர்தம் சிந்தனைகளைப் பகிர்வதும், இலக்கியக் கூட்டத்தின் வாயிலாக இலக்கிய விழுமியங்களை எடுத்துரைப்பதாகவும் பங்களிக்கப் போகிறார். அத்தோடு பாகுபலிப் படத்தின் அனுபவங்களையும் பகிர்வார் என எதிர்பார்க்கலாம். நாமனைவரும் ரோகிணி அவர்களை வரவேற்று, சிந்தனைப்பகிர்வுகளை நுகர்வதோடு அவரின் அனுபவங்களின் வாயிலாக ஊக்கமும் பெறுவோம்.

Please accept YouTube cookies to play this video. By accepting you will be accessing content from YouTube, a service provided by an external third party.

YouTube privacy policy

If you accept this notice, your choice will be saved and the page will refresh.

பேரவை விழாவில் எனது நிகழ்ச்சிகள்

கருத்துக்களம்

ரோகினி – சிறப்புரை

Main Auditorium

ரோகினி – சிறப்புரை

READ MORE

கருத்துக்களம்

Main Auditorium

தலைப்பு:- தமிழ் மரபுகள் மீட்கப்படுகின்றனவா? அழிக்கப்படுகின்றனவா?  

கருத்துக்களம்
READ MORE