speaker-info

ராஜு

பேராசிரியர், இயக்குநர் - மருதநாயகம் மரபு நாடகம்

முனைவர் ஆர்.இராஜு அவர்கள் புதுச்சேரிப் பல்கலைக்கழகப் பேராசிரியர். தெருக்கூத்துக் கலையில் ஆய்வு மேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றவர். பொருளாதாரத்துறையிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஊரகக் கலைகளும் பண்பாடுமென்கிற துறையிலும் பட்டயம் பெற்றவர். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழிலும் நாட்டம் கொண்டு, நேரிய பயிற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து அதன் வளர்ச்சிக்குத் தன் பங்களிப்பை அளித்து வருபவர்.

நாடகம், நிகழ்த்துகலைகள் தொடர்பாக பல நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார். நாடகத்துறையில் கால்பதிப்பவர்களுக்கும், அத்துறையில் பயில விரும்பும் மாணவர்களுக்கும் அவரது நூல்கள் பயனுள்ளனவாக இருந்து வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல கருத்தரங்குகளில் பங்கு பெற்று பல விரிவுரைகளை நல்கியிருக்கிறார். நாட்டுப்புற ஆய்வாளர் நா.வானமாமலை அவர்கள் படைத்தளித்த மருதநாயகம் மரபு நாடகத்தினையும் இயக்கி, வடிவமைத்து அமெரிக்கத் தமிழர்களுக்குப் படைக்கவிருக்கிறார். கலைகள் போற்றுவோம்; மரபு மீட்டெடுப்போ ம் என்கிறதுக்கொப்பவும், நூற்றாண்டு விழா நாயகர் நா.வானமாமலை அவர்களுக்குச் சிறப்புச் செய்யுமுகமாகவும், பேராசிரியரது வருகையும் பங்களிப்பும் இருக்கப் போகிறது. விழாவுக்குச் சென்று களித்திடுவோம்.

My Sessions

மருதநாயகம் – நாடகம்

Main Auditorium

மினசோட்டா மாகாணத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 30 ஆவது ஆண்டு தமிழ் விழாவில் ’மருதநாயகம்’மரபு நாடகம் அரங்கேற உள்ளது. நா. வானமாமலை (1917 – 1980) தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், தமிழறிஞர். தமிழரிடையே வழங்கி வந்த நாட்டார் பாடல்களை, கதைகளை, பழமொழிகளை, வழக்கங்களை சேகரித்துப் பதிப்பித்தார். ஐவர் ராசாக்கள் கதை, கட்டபொம்மு கூத்து, கட்ட பொம்மன் கதைப்பாடல் காத்தவராயன் கதைப்பாடல், கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் […]

நாடகம்
READ MORE