speaker-info

நல்லசிவம்

பண்ணிசை பாடகர், பண்ணிசை ஆய்வாளர், பேச்சாளர்

தமிழ்ப் பண்ணிசை ஆய்வாளர் கோ.ப.நல்லசிவம்

முனைவர் கோ.ப.நல்லசிவம் அவர்கள் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் மொழிப்புல மெய்யியற்துறையின் உதவிப் பேராசிரியர் என்பதோடு பன்முகத்திறம் கொண்ட தனியாளுமையாகத் திகழ்ந்து வருகிறார். யோகா, கல்வெட்டியல், சுவடியியல், மூலிகை மருத்துவம், பக்தி இலக்கிய ஆய்வாளர், பண்ணிசை ஆய்வாளர், பேச்சாளர், எழுத்தாளரென விளங்குவதோடு, தேவார இசைமணி, சைவச்செம்மல், இலக்கியயிசையரசு உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர். திருவாசகம், திருமந்திரம், பெரியபுராணம், சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்கள் யாவினையும் தெள்ளியபாங்கில் சுவையின்பத்தோடு இயம்பக்கூடியவர். இலக்கியப் பாடல்களானாலும், நாட்டுப்புறப் பாடல்களானாலும் அதனதன் மெட்டு, சந்தமென அதற்கேவுரிய இலக்கணங்களை விரித்துரைத்துப் பாடி, கேட்போரை இன்பச்சோறுண்ண வைப்பவர்.

நவீன இலக்கியத்திலும் நாட்டம் கொண்டு மிகச் சிறப்பாகப் பேசி கூட்டத்தினை நகைச்சுவையின்பத்தில் ஆழ்த்திச் சிரிக்க வைக்கும் திறன் கொண்டவர். ’கழுத்துக்குக் கயிறு ஏறாததால், கயிற்றுக்குக் கழுத்து ஏறியது!’, ‘ம்ரத்தை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்; மந்திரியின் மரம்நடு விழாவிற்கு! அவர்களை விட்டு வைப்பதை விட நட்டு வைப்பது மேல்’, ‘விளைநிலங்களைப் பட்டா போடும் மனிதா எச்சரிக்கை, வரும்காலத்தில் உன் மண்டையில் மட்டுமே எஞ்சியிருக்கும் மண்!’,’மழலைகட்கு நாவில் சொட்டு, மக்கட்கு விரலில் சொட்டு, இரண்டுமே போலியோ!’, ’கண்ணே உன்னை என் மனச்சிறையில் வைத்தேன்; நீ உன் அப்பாவிடம் சொல்லி என்னை மத்தியச் சிறையில் வைத்துவிட்டாயே?’ போன்ற துணுக்குக் கவிதைகளையும் தன் போக்கில் எடுத்தியம்பிப் பேசுகிறார். அதனதன் அணிக்கொப்ப, நடவுப்பாட்டு, ஏர்ப்பாட்டு, ஏற்றப்பாட்டு, உழவுப்பாட்டு, பக்திப்பாட்டுயென எல்லாவிதமான பாடல்களையும் பாடிக்காட்டுகிறார்.

ஜூன் 1,2 தேதிகளில், மினியாபொலிசு, மின்னசோட்டாவில் நடைபெறவிருக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 2017ஆம் ஆண்டுக்கான திருவிழாவின் போது, சிறப்புரை, பண்ணிசை, இலக்கியக்கூட்டம் முதலானவற்றில் தன் பங்களிப்பை நல்கவிருக்கிறார். அனைவரும் வருக, முனைவர் நல்லசிவம் அவர்களின் வாயிலாக தமிழ் மரபினைக் கற்று இன்புறுவோம்; விழுமியச் சிறப்பெய்துவோம்!!

தமிழ் பண்ணிசைப் பயிற்சி

Please accept YouTube cookies to play this video. By accepting you will be accessing content from YouTube, a service provided by an external third party.

YouTube privacy policy

If you accept this notice, your choice will be saved and the page will refresh.

 

Please accept YouTube cookies to play this video. By accepting you will be accessing content from YouTube, a service provided by an external third party.

YouTube privacy policy

If you accept this notice, your choice will be saved and the page will refresh.

பேரவை விழாவில் எனது நிகழ்ச்சிகள்

தமிழிசை, சொற்பொழிவு, இலக்கியக்கூட்டம்

பண்ணிசைப் பயிற்சிப்பட்டறை

Room – 205 B

பண்ணிசைப் பயிற்சிப்பட்டறை

இசை இளையோர் கலை குழந்தைகள்
READ MORE

பண்ணிசைக் கச்சேரி

Main Auditorium