speaker-info

முருகவேல்

இசை ஆய்வாளர்

இசை ஆய்வாளர் பி.முருகவேல்

திரு.பி.முருகவேல் அவர்கள், நிகழ்த்துகலை ஆய்வாளரும் பேராசிரியருமான முனைவர் ஆர்.இராஜு அவர்களின் மாணாக்கர், மற்றும் பாண்டிச்சேரி நிகழ்த்துகலைத் துறையின் இசையமைப்பு விரிவுரையாளராகவும் திகழ்கிறார். நிகழ்த்துகலை(performing arts) பன்னாட்டுக் கரத்தரங்குகளில் கலந்து கொண்டு பல விரிவுரைகளையும் நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து கொடுத்து வருகிறார்.

மரபுக்கலைகள், மரபுக்கலைகளுடன் இயைந்து வரும் பலதரப்பட்ட இசைக்கருவிகள் முதலானவற்றை ஆய்ந்து கற்றுப் பயின்றவர். பேரவையின் அமெரிக்க தமிழ்த்திருவிழாவில் இடம் பெறவிருக்கும் ’மருதநாயகம்’ மரபுக்கலை நாடகத்திற்கு இசையமைப்புச் செய்து பங்களிக்கவுமுள்ளார். தமிழ் மரபு சார்ந்த இசைக்கருவிகளைப் பற்றி அறிய நாட்டமுள்ளோர் அவரைக் கண்டு கலந்துரையாடவும் இதுவோர் அரிய வாய்ப்பு.

My Sessions

மருதநாயகம் – நாடகம்

Main Auditorium

மினசோட்டா மாகாணத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 30 ஆவது ஆண்டு தமிழ் விழாவில் ’மருதநாயகம்’மரபு நாடகம் அரங்கேற உள்ளது. நா. வானமாமலை (1917 – 1980) தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், தமிழறிஞர். தமிழரிடையே வழங்கி வந்த நாட்டார் பாடல்களை, கதைகளை, பழமொழிகளை, வழக்கங்களை சேகரித்துப் பதிப்பித்தார். ஐவர் ராசாக்கள் கதை, கட்டபொம்மு கூத்து, கட்ட பொம்மன் கதைப்பாடல் காத்தவராயன் கதைப்பாடல், கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் […]

நாடகம்
READ MORE